News Just In

11/05/2020 11:48:00 AM

மின்சாரம் மற்றும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!!


இலங்கையில் மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மின்சக்தி வள அமைச்சும், நீர்விநியோக சபையும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. 

நாட்டின் சில இடங்களில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் மின்சாரம் மற்றும் நீர் பாவனை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றை தடையின்றி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்டலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: