நாட்டு மக்களுக்கு பசி பட்டினி இல்லாமல் அவர்களை வழி நடத்த வேண்டும் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்காக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை அரசாங்க அதிபருக்கு வழங்கியிருக்கின்றது. நேற்றைய தினம் 300க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்த குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆகவே நோயிலிருந்தும் பசியிலி ருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதால் அரசாங்கம் அதை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றது. அதைக் குறித்து யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை நீங்கள் பாதுகாப்பாக இருப்பது தான் மிக முக்கியம்.
இவ்வாறு ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (௦2) வந்தாறுமூலை கிராமத்தில் சுமார் 2௦ இலட்சம் ரூபா செலவில் சப்ரிகம திட்டத்தில் புதிதாக நிருமானிக்கப்படவுள்ள தேவிகா வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்த பின் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
தற்பொழுது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரிய சவால் இந்த கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம் வருடத்தின் மார்ச் மாத பகுதியில் கொரோனா வைரசின் முதல் தாக்கம் நாட்டில் ஏற்பட்டது.
இந்த நாட்டை பாதுகாக்கின்ற செயல்பாட்டில் நாட்டினுடைய மேன்மைதங்கிய ஜனாதிபதி கௌரவ பிரதமர் மற்றும் வைத்திய துறைசார்ந்த வைத்திய அதிகாரிகள் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் என்று அனைவருடைய உழைப்பினால் கொரோனவைரஸ் இலிருந்து எமது நாட்டை பெருமளவு பாதுகாக்க முடிந்தது.
அவ்வாறு பாதுகாப்பான ஒரு சூழல் இந்த நாட்டிலே நிலவிக் கொண்டிருக் கின்றபோது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இப்போது உருவெடுத் திருக்கின்றது இது ஏற்கனவே இருந்ததை விட மிக ஆபத்தானது என்று வைத்திய அதிகாரிகளும் வைத்திய நிபுணர்களும் கூறியிருக்கின்றார்கள் இந்தச் சூழலில் எத்தனையோ அபிவிருத்தி அடைந்த நாடுகள் கதிகலங்கிப் போயிருக்கின்றன. அபிவிருத்தியடைந்த வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி போயிருக்கின்ற இந்த சூழலில் இந்த இலங்கைத் திருநாட்டில் ஒரு உயர்தரமான சுகாதார சேவையை வழங்கி இலங்கை மக்களை பாது காக்கவேண்டும் என்ற நடவடிக்கையில் அரசாங்கம் கூடுதலாகசெயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணபட்டவர்கள் நேற்றுவரை 40-பேர் 35 பேர் பேலியகொடை மீன் சந்தைக்கு போய் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும் மீதி ஐந்து பேரும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஒருவர், மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் போரதீவுப்பற்று வெல்லாவெளியில் ஒருவரும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரிவில் ஒருவரும் கிரான் பிரதேச செயலார் பிரிவில் இருந்து ஒருவருமாக 40 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
.இப்பொழுது கிழக்கு மாகாணத்திலே ஐந்து வைத்தியசாலைகள் கொரோனா தொற்று வைத்திய சிகிச்சை அளிக்கும் நிலையங்களாக இயங்கி வருகின்றன ஒன்று ஈச்சிலம்பற்று காத்தான்குடி மகாஓயா கரடியனாறு அம்பாறை பாலமுனை இந்த வைத்தியசாலைகளை மூன்றில் நோய் நோயாளிகள் முழுமையாகி விட்டார்கள் இப்பொழுது தொற்றுக்குள்ளானவர்களை வருபவவர்களை பதியாதலாவ மற்றும் அம்பாறை பாலமுனை போன்ற இடங்களுக்கு அனுப்பிகொண்டிருக்கின்றோம்.
ஆகவே மக்களுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூறி வைக்க விரும்பு கிறேன் ஒவ்வொருவரும் உங்களது சுய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் இது ஒரு மிக ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும் ஆபத்தான நோயாகும் இதிலிருந்து நாம் விடுபட்டு வரவேண்டுமானால் நாட்டினுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்து சுகாதார அதிகாரிகள் சொல்கின்ற விடயங்களுக்கு செவிமடுத்து ஒவ்வொருவரும் உங்களுடைய சுய பாதுகாப்பில் கிராம ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்விடத்தில் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன் கிராமத்தில் இருக்கின்ற சமூக அமைப்புகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் செவ்வனே செய்யவேண்டும் யாராவது வெளிமாவட்டத்திலிருந்து இங்கு வந்து தங்கியிருப்பார்கள் அவர்களை பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக வைத்திய அதிகாரியை நாடவையுங்கள். இது மிக முக்கியம் ஆகவே நாட்டின் அரசாங்கத்துக்கு இருக்கின்ற மிகப் பெரிய சவால் இந்த கொவிட் 1 9 கொரோனாவை முற்றாக ஒழிக்க வேண்டும். கொரோனா வைரசை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.

No comments: