News Just In

11/30/2020 05:31:00 PM

பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பும்; போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு...!!


பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று முதல் அலுவலக ரயில்கள் உட்பட 104 ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த ரயில்கள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: