News Just In

11/03/2020 06:37:00 AM

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்...!!


கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்தகமை, மாவனல்லை, புளத்கொஹுப்பிட்டிய மற்றும் கலிகமுவ பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக
கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது

No comments: