News Just In

11/08/2020 05:34:00 PM

ஏறாவூர் நவீன பொதுச் சந்தை நிர்மாணப் பணிகளை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உடனடியாக ஆரம்பிக்கும்- நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நிர்மாணிக்கப்பட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் தடைப்படுத்தப்பட்ட ஏறாவூர் நவீன பொதுச் சந்தையின் கட்டுமானப் பணிகள் அரசின் ஒப்புதலோடு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஞாயிறன்று 08.11.2020 கருத்துத் தெரிவித்த அவர் ஏறாவூர் பொதுச் சந்தை சகல விதமான கட்டுமான நியமங்களுக்குட்டு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் நிருமாணிக்கப்பட்டு வரும் வேளையில் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் அநாமதேய முறைப்பாடுகளால் தடைப்படுத்தப்பட்டதாகும்.

ஆனால் அந்த அநாகரிக சுயநலமிகளின் சூழ்ச்சிகளையும் முறியடித்து ஏறாவூர் பொதுச் சந்தையின் நிருமாணப் பணிகள் உடனடியாகத் துவங்குவதற்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் அதன் சக்திக்குட்பட்டு இந்த சந்தைக் கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை உயர் தரத்திலும் சிறப்பானதாகவும் பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அஇந்த கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும் அது பொது மக்களின் பாவனைக்காக சந்தை வியாபாரிகளிடம் கையளிக்கப்படும்.” என்றார்.






No comments: