News Just In

11/11/2020 09:00:00 AM

ஆரையம்பதியில் அரசின் சேவைகளை வழங்க பிராந்திய மக்கள் பணிமனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் திறந்து வைத்தார்!!


(காத்தான்குடி லத்தீப்)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இலகுவாக அரசின் சேவைகளை மக்களுக்கு வழங்கும் பொருட்டு மண்முனைபற்றுக்கான பிராந்திய மக்கள் பணிமனையொன்றினை திறந்து வைத்துள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதேச இணைப்பாளர் தோமஸ் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் முற்போக்கு தமிழர் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இது பற்றி தகவல் வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்கள் தம்மை சந்தித்து சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் கொழும்புக்கோ அல்லது மட்டக்களப்பு நகருக்கோ வந்து அலையவேண்டியதில்லை என தெரிவித்தார்.

பிரதேச மட்டத்தில் திறக்கப்படும் பிராந்திய மக்கள் பணிமனையில் தமது கோரிக்கைகளை சமர்பிக்க முடியுமென்றும் தாம் நேரில் மக்களை இப்பணிமனைக்கு வருகை தந்து நேரில் சந்திக்க விரும்புவதாகவும் வருகை பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.








No comments: