பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கமைய மாவட் சிறைச்சாலை திணைக்களம், கலால் திணைக்களம், பிரதேச செயலகங்கள், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இந்த மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தீவிரமான திட்டமொன்றை அமுல் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போதைப் பொருள் பாவனைக்குட்படுத்தப்படும் இடங்கள் திடீர் வேட்டைக் குட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த தீவிர நடவடிக்கை பற்றி திட்டம் வகுக்கும் விசேட செயலமர்வொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நேற்று (29) நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமய தீவிரமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விசேட செயலமர்வில் அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் அரச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து தமது ஆலோசனைகளை வெளியிட்டனர்.
பாதுகாப்பு அமைச்சு விடுத்த பணிப்புரைக்கமைய மாவட்டத்தில் இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ஜி.விஜயதர்ஷன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இச்சபையினால் போதைப்பொருள் தடுப்பு பற்றிய விசேட பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் இணைப்பாளர் விஜயதர்ஷன் மேலும் தெரிவித்தார்.





No comments: