News Just In

11/30/2020 05:06:00 PM

மோட்டார் வாகன திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!!


மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள் முன்பதிவு செய்து கொள்வதற்கான புதிய தொலைபேசி இலக்க ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0112 677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments: