இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி 6ம் குறிச்சியை சேர்ந்தவர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர் கொழும்பில் பணிபுரிந்து கடந்த 29ம் திகதி காத்தான்குடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: