மட்டக்கள்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் மதஸ்தலங்களில் கொரோணா தொற்று பரவுதலை தடுப்பது தொடர்பான சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்தல் தொடர்பான விஷேட கூட்டம் ஏறார்ப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத், எறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே.ஜயந்த ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இந்து மத குருமார்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் தற்போதைய நாட்களில் விரதங்கள் மற்றும் ஏனைய மத அனுஷ்டானங்கள் விசேடமாக நடைபெறும் காலம் என்பதால் பக்தர்கள் ஆலய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பங்களில் அரசினால் அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டலின் படி சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
பிரதேச சுகாதார துறையினரால் தெளிவு படுத்தப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய நாளாந்த மற்றும் விசேட பூசைகள் நடைபெறலாம்.
இவ் விசேட பூசை காலங்களில் ஆலயங்களில் பிரசன்னமாகக்கூடிய குருமார் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆலய நிருவாகிகளினால் எழுத்து மூல அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிய அனுமதியினை பெற்றுக்கொள்வதற்காக ஆலய நிருவாகத்தினால் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எழுத்து மூலம் கோரிக்கை அனுப்பப்படல் வேண்டும். குறித்த ஆலயத்திற்கு பொதுச்சுகாதார பரிசோதகர் கள விஜயத்தினை மேற்கொண்டு அனுமதியினை வழங்குவர்.
பிரதேச சுகாதார துறையினருடன் சுகாதார நெறி முறைகளை நன்கு விழங்கி ஏற்றுக் கொண்ட அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆலயத்தின் சூழல் மற்றும் அங்கு வருகை தரக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் எடுத்து நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியினை வழங்குவர்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மீறிச் செயற்படும் சந்தர்ப்பங்களில் ஆலய நிருவாகம் அதற்கு பொறுப்புடயவர்கள் ஆதலால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
எனவே தற்போதைய ஆபத்தான நிலையினைக் கருத்தில் கொண்டு அரசினால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி ஆலய பூசைகளை மேற்கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.





No comments: