News Just In

11/11/2020 01:48:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 612ஆக உயர்வு!!


இலங்கையில் மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அத்துடன் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஆறு பேரும், கொழும்பு - 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகியவற்றிலிருந்து தலா ஒவ்வொரு அதிகாரிகளும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் மொத்தமாக 612 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 145 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

No comments: