News Just In

11/11/2020 09:53:00 AM

ஐ.பி.எல். இறுதி போட்டியில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை!!

டெல்லி அணிக்கெதிரான இறுதி போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன் படி டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

மும்பை அணிக்கு முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் பந்தை சந்தித்தார். டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டோய்னிஸ் பேட்டை உரசி கீப்பரிடம் செல்ல, டெல்லி அணி ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அடுத்து வந்த ரகானே 3-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பிய தவான் ஜெயந்த் ஜாதவ் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 22 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இதனால் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதுவரை சரியாக விளையாடாத ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது டெல்லி அணி 15 ஓவரில் 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஹெட்மையர் 5 ஓட்டங்களில் ஏமாற்றம் அடைந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தாலும், கடைசி கட்ட ஓவர்களில் டெல்லி அணியால அதிரடியாக விளையாட முடியவில்லை.

6-வது ஓவரில் 7 ஓட்டங்களும் , 17-வது ஓவரில் 11 ஓட்டங்களும், 18-வது ஓவரில் 6 ஓட்டங்களும், 19-வது ஓவரில் 6 ஓட்டங்களும், கடைசி ஓவரில் 8 என அடிக்க, இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.

ஷ்ரேயாஸ் அய்யர் 50 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின் 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக குயிண்டன் டி காக், ரோகித் சர்மா களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 12 பந்தில் 20 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 20 பந்தில் 19 ஓட்டங்கள் என வெளியேற, மறுபுறம் தனி ஒருவனாக டெல்லி அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.

அதன் பின் அவர் 68 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை 5-வது முறையாக கைப்பற்றியது.

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் முடிவில் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதிக ரன்கள், அதிக விக்கெட்கள், அதிக மதிப்புமிக்க வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

அதன் முழு பட்டியல் இங்கே. 
எந்த வீரரும் தொடாத உச்சம் வியக்க வைக்கும் ஐபிஎல் ரெக்கார்டு.. பைனல் வரை கதிகலங்க வைத்த நியூசி. வீரர் ஆட்டநாயகன் 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ட்ரென்ட் போல்ட் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 

ரோஹித் சர்மா அரைசதம் அடித்த போதும் ஆட்டநாயகன் விருது போல்ட்-டுக்கு வழங்கப்பட்டது. 

வளர்ந்து வரும் இளம் வீரர்
வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் வென்றார். அவர் இந்த தொடரில் ஐந்து அரைசதம் அடித்து 473 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 124 ஆகும். 

மும்பை அணி பேர்பிளே விருதை வென்றது. 

சூப்பர் ஸ்ட்ரைக்கர் 
இந்த சீசனின் கேம் சேஞ்சர் விருதை கேஎல் ராகுல் வென்றார். 
சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை கீரான் பொல்லார்டு வென்றார். அவர் இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 191.42 ஆகும். இதுவே இந்த சீசனில் அதிகம். 

அதிக சிக்ஸ் 
அதிக சிக்ஸ் அடித்த இஷான் கிஷன் இந்த சீசனின் அதிக சிக்ஸ் அடித்த வீரருக்கான விருதை வென்றார். அவர் 30 சிக்ஸ் அடித்து இருந்தார். 

பவர்பிளேயர் விருதை பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய ட்ரென்ட் போல்ட் வென்றார். 

அதிக ரன், அதிக விக்கெட் 
அதிக ரன் எடுத்த வீரராக கேஎல் ராகுல் ஆரஞ்ச் கேப்பை தொப்பியை வென்றார். அவர் 670 ரன்கள் குவித்து இருந்தார். 

அதிக விக்கெட் வீழ்த்திய டெல்லி அணியின் காகிசோ ரபாடா பர்ப்பிள் தொப்பியை வென்றார். அவர் 30 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். 

மதிப்புமிக்க வீரர் 
அதிக மதிப்புமிக்க வீரர் விருதை ஜோப்ரா ஆர்ச்சர் வென்றார். புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அவர் 20 விக்கெட்கள், 175 டாட் பால்கள், 5 கேட்ச் மற்றும் 10 சிக்ஸ் உடன் இந்த விருதை வென்றார். 

பரிசுத் தொகை 
இந்த சீசனுக்கு முன் ஐபிஎல் தொடரில் அணிகளுக்கு அளிக்கப்படும் பரிசை பாதியாக குறைத்து இருந்தது பிசிசிஐ. அந்த முடிவை தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டது. கோப்பை வென்ற மும்பை அணிக்கு 20 கோடியும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி அணிக்கு 12.5 கோடியும் பரிசு வழங்கப்பட்டது.








No comments: