கொட்டாஞ்சேனை - ஜம்பட்டாவீதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மரண பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி இந்தப் பெண் கொவிட்19 நோயால் ஏற்பட்ட நிமோனியாவினால் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்துடன் இலங்கையில் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

No comments: