News Just In

11/03/2020 03:06:00 PM

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம்- கல்வி அமைச்சு


இலங்கையில் 3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையில் பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளின் உதவியுடன் இவ்வாறு கல்வி முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளை சரியான முறையில் ஆரம்பிப்பது முடியாத காரியம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: