றாகமை மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த நபரை கண்டால் காவற்துறையினருக்கு பொது மக்கள் தகவல் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: