கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களை வைத்தியசாலைக் அழைத்து செல்ல வேண்டிய ஏற்பாடுகள் உடன் செய்யப்படுவதுடன், அதற்காக அம்புலன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
ஆனாலும் தொற்றாளர்கள் சிலர் வைத்தியசாலைக்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார தரப்பினர் தம்மிடம் முறையிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு உதவுவது மாத்திரமல்லாது, தொற்றாளர்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்குமாறும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: