News Just In

10/06/2020 08:57:00 AM

மட்டக்களப்பில் தரண் பௌண்டேசன் நிதி அனுசரணையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் சாதனங்கள் வழங்கி வைப்பு!!


வட, கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட சமூகசேவைப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற பிராண்ஸ், “தரண் பௌண்டேசனின்” பூரண நிதி அனுசரணையில் 2020 சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக, மட்டக்களப்பின் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 60 வறிய மாணவர்களுக்கு கற்றல் சாதனங்கள் மற்றும் சிற்றுண்டிகள் என்பன “தாயக நண்பர்கள் வட்டம்” அமைப்பின் ஒழுங்கமைப்பின் கீழ் நேற்றைய தினம் 04.10.2020 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு, ஐயங்கேணிக் கிராமத்தில் அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் 28 வறிய மாணவர்களுக்கும், ஆரையம்பதியில் இருவேறுபட்ட பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 32 வறிய மாணவர்களுமாக இவ்வுதவிகளானது மகிழ்ச்சிகரமான சிறுவர் தின கொண்டாட்டங்களுடன் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வறிய மாணவர்களுக்கு இவ்வாறான கைங்கரியத்தினை புரிந்த தரண் பௌண்டேசன் அமைப்பின் நிர்வாகத்தினருக்கு உதவிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆகியோர் தங்களது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.






No comments: