News Just In

9/15/2020 08:35:00 AM

கற்பிட்டியில் மீன்பிடி வலையில் சிக்கிய ஆண் ஒருவரின் சடலம்


கற்பிட்டி வன்னிமுந்தல் களப்பு பிரதேசத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படைவில்லை என கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

No comments: