News Just In

9/21/2020 06:29:00 AM

மட்டக்களப்பு- கன்னன்குடாவில் மாணவர்களைக் கொண்டு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாணவர்களைக் கொண்டு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை 18.09.2020 நடைபெற்றது.

கிழக்குமாகாண மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் என்பனவற்றுடன் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக மரங்களும் நாட்டப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திட்குட்பட்ட மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் பாடசாலை அதிபர் கே. சச்சிதானந்தன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குமாகாண மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தினால் திட்ட இணைப்பாளர் தேவகுமார் தஷாந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் கிழக்குமாகாண மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் டி. பிரதிலீபன் கிழக்கு மாகாண மருத்துவ பிரதிநிதிகள் உட்பட சங்கத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.








No comments: