கிழக்கு மாகாணப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு வாகனப் போக்குவரத்து வீதிப் பாதுகாப்பு தொடர்பாடல் விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தும் பயிற்சிச் செயலமர்வு சனிக்கிழமை 19.09.2020 மட்டக்களப்பில் நடைபெற்றது.
பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி சரத் சந்திர ஒழுங்கமைப்பில் வாகன போக்குவரத்து வீதி பாதுகாப்பு உதவி பொலிஸ்மா அதிபர் டப்ளியு சுமித் நிஷங்க தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சி செயலமர்வில் கிழக்குமாகாண வீதி வாகன போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வாகன போக்குவரத்து வீதி பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியில் வாகன போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வாகன போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸாருக்கு வாகன போக்குவரத்து தொடர்பாக செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.






No comments: