வீதி ஒழுங்கு சட்ட விதிமுறைகளை மீறிசெயற்படும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதைத் தவிர்த்து, அபராதம் விதிக்கப்படுவதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதி சமிக்ஞை தொடர்பிலும் இன்று முதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை 6 மணிமுதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: