News Just In

9/09/2020 02:43:00 PM

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!


பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், சுகாதார வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலையில் மாணவர்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நேற்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

No comments: