கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கனரக வாகனமொன்றில் சைக்களில் பயணித்த வயோதிபர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுகின்றனர்.
அதேநேரம் கனரக வாகனத்தின் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: