News Just In

9/17/2020 03:03:00 PM

இணையம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை- வெளியாகிய காரணம்!!


இலங்கையர்கள் வௌிநாடுகளில் குலுக்கள் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, சீனா மற்றும் பிலிபைன்ஸ் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்களினால் 6 கோடி ரூபாவிற்கு அதிகமான பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக 101 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மோசடியாளர்களிடம் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments: