அரசியலமைப்பை மீறியதற்காகவும், ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 39 பேரை கொலை செய்ததற்காகவும், 79 பேரை கொலை செய்ய முயற்சித்ததற்காகவுமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல்லின் கடுமையான தண்டனை எண் 27 கீழ் உஸ்பெக் நாட்டைச் சேர்ந்த அப்துல்கதிர் மஷரிபோவுக்கே இவ்வாறு 1,368 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாத தாக்குதலின் திட்டமிடுபவர்களில் ஒருவராகவும், மஷரிபோவுக்கு உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இலியாஸ் மாமாசரிபோவ்வுக்கு கொலை மற்றும் கொலை முயற்சிகளுக்கு உதவியதற்காக 1,432 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2017 ஜனவரி முதலாம் திகதி அதிகாலை இஸ்தான்புல்லின் ஓர்டாகே மாவட்டத்தில் உள்ள ரெய்னா இரவு விடுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வின்போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 79 பேர் காயமடைந்திருந்தனர்.
தாக்குதலின் பின்னர் 34 வயதான மஷரிபோவ் 17 நாட்கள் இஸ்தான்புல் பகுதியில் ஒரு மறைவிடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
No comments: