இப் போட்டியானது இன்று மாலை டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஆண்டு இறுதி இடத்திற்கு தள்ளப்பட்ட ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை புது உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.
புதிதாக அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். இது ஐ.பி.எல்.லில் அவர் கால்பதிக்கும் 8 ஆவது அணியாகும்.
கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வோஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸும் அணிக்கு வலுச் சேர்த்துள்ளனர்.
இப் போட்டியில் வில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை விளாசினால் ஐ.பி.எல். தொடரில் மொத்தமாக 200 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பொறுவார்.
அதேபோல் விராட் கோலிக்கும் ஐ.பி.எல்.லில் 5,500 ஓட்டங்களை கடப்பதற்கு இன்னும் 88 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.
வோர்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்த வோர்னரும், ஜோனி பெயர்ஸ்டோவும் அசத்தலான ஆரம்பத்துக்காக காத்துள்ளனர்.
உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், மொஹமட் நபி இருவரும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கான களமிறங்கும் வாய்ப்பு நழுவிப் போகும்.
புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அஹமட், சித்தார்த் கவுல் என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
சித்தார்த் கவுலை பொருத்த வரையில் இன்னும் ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினால் ஐ.பி.எல்.லில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார்.

No comments: