குறித்த பகுதியில் சம்பவதினதான ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இளைஞர் ஒருவர் வாளுடன் சுற்றிதிரிவதாக பொலிஸ் அவசர பிரிவு 119 இலக்கத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைத்து சோதனையில் வாளுடன் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்ததுடன் வாள் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட சிறுவனை நேற்று (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments: