News Just In

8/07/2020 12:18:00 PM

தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் – பூ.பிரசாந்தன்

கிழக்கு தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமோக வெற்றியீட்டியதை தொடர்ந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தியது.இதில் கலந்துகொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்திகளைசெய்வதற்காகவும் அரசாங்கத்துடன் இணக்க ஆட்சியை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள் ஊடக சந்திப்பினை தொடர்ந்து ஊர்வலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் முன் கூடி முன்னாள் நின்று மட்டக்களப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



















No comments: