News Just In

7/04/2020 02:25:00 PM

மட்டக்களப்பில் விறகு வெட்ட சென்ற நபருக்கு நடந்த சம்பவம்-சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுணதீவுப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்திற்கு விறகு வெட்ட சென்ற ஒரு பிள்ளையின் தந்தையான சின்னத்துரை சுந்தரலிங்கம் (64) வயதுடையவர் யானையின் தாக்குதலுக்கு அகப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து அவரின் நண்பருடன் கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்திற்கு விறகு வெட்டுவதற்கு சென்று இருவரும் அப்பிரதேசத்தில் வெவ்வேறு பக்கமாக விறகு வெட்டுவதற்கு சென்றபோது யானையின் சத்தம் கேட்டு அவருடன் சென்ற நண்பர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் யானையின் தாக்குதலில் அகப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (3) அன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் அவர்கள் விசாரணைகளின் பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி வவுணதீவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments: