News Just In

7/02/2020 07:27:00 PM

வெளியேறினார் குமார் சங்கக்கார


9 மணித்தியால வாக்குமூலம் வழங்கலின் பின்னர், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவிலிருந்து வெளியேறினார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் 9 மணியளவில் குறித்த குழுவில் முன்னிலையானார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: