அரசாங்கத்தினால் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மற்றும் கோறளைப்பற்றுமத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தினால்வழங்கப்பட்;ட அறிவுறுத்தல்களுக்கமைய தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாயல்கள் கடந்த வாரம் திறக்கப்பட்டநிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு அனுமதிவழங்கப்பட்டு தொழுகையும் இடம்பெற்றது.
அத்தோடு பள்ளிவாயலினுள் மக்கள் இருக்கின்ற போது ஒருமீட்டர் சமூக இடைவெளியையும் பேணும் வகையில் இறை கடமையில் ஈடுபட்டதை காண முடிந்தது.
கடந்த மூன்று மாதங்களின் பின்னர் நாட்டின் ஜும்ஆ தொழுகைஇடம்பெற்றதனை முன்னிட்டு மக்கள் பள்ளிவாயல்களுக்கு சந்தோசத்துடன் வருகை தந்ததைஅவதானிக்க முடிந்தது.














No comments: