News Just In

5/08/2020 06:22:00 PM

போரதீவு இளைஞர்களினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்படுத்துவற்காக இலங்கை அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. இதனால் அன்றாட தினக்கூலிக்கு வேலை செய்யும் மக்கள் நிர்க்கதியான நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர் செய்யும் முகமாக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பெரிய போரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் 06ஆம் கட்ட நிவாரணப் பணிகள் தங்கள் பிரதேசம் கடந்தும் செய்யப்பட்டு வருகின்றது.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசற்திற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில்லுள்ள 60 குடும்பங்களிற்கான உலருணவுகள் அடங்கிய பொதிகள் இவ் இளைஞர்களினால் இன்று (08.05.2020) வழங்கி வைக்கப்பட்டது. இவர்கள் பொத்துவில், கோமாரி, போரதீவுப்பற்று பிரதேசம் என 700இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இடர்கால நிவாரணம் வழங்கியுள்ளனர். இன்றைய கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுகின்ற இந்த இளைஞர்களின் செயற்பாடு பாராட்டத்தக்கதாகும்.

No comments: