அவள் தனித்துவமானவள் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து லியோ கழக உறுப்பினர்களின் நடை பவனி ஆரம்பிக்கப்பட்டு அரசடி மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி மீண்டும் காந்திப்பூங்காவை வந்தடைந்தது.
கழகத் தலைவர் லியோ டிரோஷன் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வினை செயலாளர் லியோ வெனிற்ரா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். இதற்கான திட்டமிடலினை லியோ தர்சன அவர்கள் மேற்கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண் உரிமை கோரிய வாசகங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு ஆரம்பமான நடை பவனி இறுதியாக காந்தி பூங்காவினை வந்தடைந்து, அங்கு நடன நிகழ்வுகள், விழிப்புணர்வு நாடகம், பேச்சு, பாடல் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இதில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.



























No comments: