News Just In

3/08/2020 08:25:00 PM

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது உழவு இயந்திரம்-ஒருவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் அராலி-வல்லை வீதியில் சித்தன்கேணி சந்திக்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் விபத்து இடம்பெற்றது.

அருகில் உள்ள உணவகம் ஒன்றில் மதிய உணவினை வாங்கிவிட்டு பண்டத்தரிப்பில் உள்ள தனது இல்லம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை அதே திசையில் சித்தன் கேணியிலிருந்து பண்டத்தரிப்பு நோக்கிச் சென்ற கலப்பை பூட்டப்பட்ட உழவு இயந்திரம் முதியவரை வேகமாக மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் எதிர்த் திசையில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து கடையினை சேதப்படுத்தியது. தெய்வாதீனமாக கடையில் இருந்த பெண்ணொருவர் உயிர் தப்பினார்.

குறித்த விபத்தில் இறந்தவர் பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராஜதுரை (வயது-65) என அடையாளம்காணப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நடந்த இடத்தில் ஆபத்தைக் குறிகும் வளைவுகள் போடப்பட்டதுடன் மெதுவாக வானங்கள் செல்வதற்குரிய குறுக்குக் கோடுகளும் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments: