News Just In

3/08/2020 08:39:00 PM

கட்சி சின்னத்தை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு


அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான கால அவகாசம் கடந்த 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி அதற்கான சந்தர்ப்பம் நாளையுடன் நிறைவடைவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் நாட்களில் கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்திற்கொண்டு சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: