News Just In

3/05/2020 08:00:00 PM

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
'விண்ணில் நிகழ்ந்த விந்தை' எனும் கவிதை 'மானுடம் தோற்றிடுமோ' எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய இருவகைப்பட்ட நூல்களின் வெளியீடும் எதிர்வரும் சனிக்கிழமை 07.03.2020 அன்று இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புலவர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி சி. சந்திரசேகரம் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: