News Just In

3/05/2020 05:46:00 PM

இரா.துரைரட்ணம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தார்!


தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சித் தாவல்களும் ஆரம்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் I.L.M.மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த M.I.மொஹமட் இஸ்மாயில் அண்மைக்காலமாக பொதுஜன பெரமுனவுடன் நெருங்கி செயற்பட்டு வருகிறார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உப தலைவருமான இரா.துரைரட்ணம், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக இன்று அறிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து இம்முறை பொதுத்தேர்தலில் பயணிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே இரா.துரைரட்ணம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

No comments: