News Just In

3/05/2020 08:23:00 PM

மாநகரசபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் மற்றும் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தினையும் மேம்படுத்தும் வகையிலும், இடைவிலகல்களைக் குறைத்து அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம் மற்றும் முகைதீன் வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இன்று (05.02.2020) இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர உறுப்பினர் நிப்லார்  மாநகர சமுக சுகாதார உத்தியோகத்தர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.






















No comments: