News Just In

3/06/2020 10:15:00 PM

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தல்

(லியோன்)
மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கல்லூரி அதிபர் கே .அருமைராஜா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்படுகின்ற மாணவர் பாராளுமன்ற தேர்தல் மூலம் உருவாக்கப்படுகின்ற மாணவ அமைச்சு பதவிகளை கொண்டு வினைத்திறன் மிக்க பாடசாலை நிர்வாக செயல்பாடுகள்,

பாடவிதான செயல்பாடுகள், இணைப்பாட விதானங்கள், இதேவேளை சிறந்த ஆளுமைமிக்காக தலைவர்களை உருவாக்கும் செயல்பாடுகள் ஜனநாயக பண்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாடசாலைகள் மத்தியில் இந்த மாணவ பாராளுமன்றம் நடாத்தப்படுகின்றது.

அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இன்று இந்த மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடாத்தப்பட்டுள்ளது. இன்று நடாத்தப்பட்ட மாணவ பாராளுமன்ற தேர்தலில் 108 மாணவ தலைவர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதேவேளை வாக்களிப்பதற்காக 1114 மாணவ வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 856 வாக்காளர்கள் வாக்குகளை அளித்துள்ளனர் ,இதில் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாணவ பாராளுமனற தேர்தல் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடாத்தத்தப்பட்டுள்ளன.

No comments: