News Just In

3/06/2020 08:53:00 PM

மட்டு ஊறணியில் விபத்து-இருவர் கவலைக்கிடம் !!


(லியோன்)
மட்டக்களப்பு ஊறணி பகுதில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் ஊறணி பகுதில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைய அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு நகரில் இருந்து வாழைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனத்திற்கு முன்னாள் மாடு ஒன்று பாய்ந்ததன் காரணமாக வாகன சாரதி உடன் பிரேக் அழுத்தியதன் காரணமாக தொடர் வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் , இதன்போது வாகனத்தின் பின்னால் வாழைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த இரு இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனத்துடன் மோதியதன் காரணத்தினால் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைய அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்த வாகன விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









No comments: