இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றம் அடைந்துள்ளது.
காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக குறைவடைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொது தேர்தலில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது.
இதேபோன்று பதுளை மாவட்டத்தில் கடந்த முறை 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் இருந்து கடந்த முறை 5 உறுப்பினர்னகள் தெரிவு செய்யப்பட்டனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: