கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய செயற்றிட்டத்தின் பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இங்கு தங்கவைக்கப்படமாட்டார்கள் எனவும், கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பப்படுவார்கள் என என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இந்த பிரிவு பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: