கிழக்கு மாகாண ஆளுநரின் கள விஜயத்தின்போது இனங்காணப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
பயனாளி ஒருவருக்கு முதல் கட்ட கொடுப்பனவாக தலா ஒரு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் இந்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வேளை திட்டத்தின் கீழ் எதிர்வரும் காலங்களில் 486 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
அத்துடன் வீடமைப்பு அதிகார சபையினால் 152 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே. ஜெனார்த்தனன், வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர். நெடுஞ்செழியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments: