News Just In

2/13/2020 11:33:00 AM

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் எட்டு பேருக்கு சிறைத்தண்டனை!

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் மீன்பிடி திணைக்களத்தினால் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ. எம். எம். முபாரீஸ் மீனவர்கள் சார்பில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து எட்டு மீனவர்களுக்கும் 12 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அச்சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்கள் எட்டு பேரையும் மிரிஹான தடுப்பு முகாமிற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments: