News Just In

2/13/2020 11:19:00 AM

ஒரே நாளில் கொரோனா வைரஸ் காய்ச்சலினால் 242 பேர் மரணம்! தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1357 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1357 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

No comments: