News Just In

2/13/2020 04:22:00 PM

மட்டக்களப்பு பன்சாலை வீதியினை ஒருவழிப்பாதையாக மாற்ற மாநகரசபையில் தீர்மானம்!!

மட்டக்களப்பு மாநகர சபையின் 30ஆவது பொது அமர்வானது இன்றைய தினம் (13.02.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதிக்குழு மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அமர்வின் விசேட அம்சமாக மட்டக்களப்பு பன்சாலை வீதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குறித்த பாதையினை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கான பிரேரணையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் அவர்களால் தீர்மானமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அவ் வீதியில் பிரயாணம் செய்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர், இதனைக் குறைப்பதற்கு அவ் வீதி ஒருவழிப்பாதையாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சிவம் பாக்கியநாதன் அவர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.






















No comments: