News Just In

2/13/2020 04:40:00 PM

மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் பெறுமதியான பொருட்கள்!


சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுர மரக்குற்றிகளை விசேட அதிரப்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பு-காத்தான்குடி வீடொன்றில் இருந்து மீட்டுள்ளதாக திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்

நேற்றுக் காலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இம்மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்.குறித்த சம்பவம் தொர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: