News Just In

2/13/2020 04:05:00 PM

முறையற்ற மின் இணைப்பு காரணமாக 103 பேர் பலி!

2019ஆம் ஆண்டு முறையற்ற மின் இணைப்பு காரணமாக 103 உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டினை விட 2019ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கியதில் 89 மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உயிரிழப்புக்களில் தென் மாகாணத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் (30 இறப்­புக்கள்) பதிவாகியுள்ளன. இது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: