News Just In

1/20/2020 07:42:00 AM

கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் விபத்து-நால்வர் உயிரிழப்பு


கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: