மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டம், கல்முனை தமிழ் வலய பிரதேசம் மற்றும் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கல்விக்கோட்டங்களில் தரம் 04, 05இல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின்(CTCT) நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில்(கல்லடி-நொச்சிமுனை) 18,19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இரு நாட்கள் இடம்பெற்ற இக்கருத்தரங்கிற்கு ஒழுங்கமைப்புக்களை மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உ.விவேகானந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
வளவாளர்களாக ஒய்வு பெற்ற அதிபர் மு.இராஜரெட்ணம், ஆரம்பப் பிரிவுக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி S.அருளேந்திரன், திருமதி E.கனகரெத்தினம் மற்றும் J.J. ஞானரெத்தினம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உரையாற்றிய தேவசிங்கன் அவர்கள்.
கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் நிதி அனுசரணையில் எங்களது வளவாளர்களைப் பயன்படுத்தி இந்த இரண்டுநாள் கருத்தரங்கினை நாங்கள் நடாத்தியிருக்கின்றோம். அந்தவகையில் வளவாளர்களுக்கும் , கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்திற்கும் எனது சார்பாகவும், உங்களது சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றேன்.
விடுமுறை தினமாக இருந்த பொழுதிலும் மாணவர்களின் நலன் கருதி கற்பித்தலை திறம்பட செய்ய வேண்டும் என்பதற்காக வருகை தந்துள்ளீர்கள். நீங்கள் உங்களது கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை கூறும் இடத்து எதிர் காலத்தில் வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களிடம் அதனை எடுத்துச் சொல்லி அதற்கான உதவிகள் கிடைக்கும் இடத்து அதனை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.

No comments: